அடித்தளம்
Foundation
இறையருளும் குருவருளும் துணையாக நிற்க, தமிழ்த்தாயை வணங்கி என் சிந்தனைகளை எழுத்தாக்குகிறேன். ஒவ்வொரு சொல்லும் என் வேர்களுக்கான சமர்ப்பணம்.
பூர்வீகமும் பயணமும்
Origin & Journey
ஈழத்தின் அச்சுவேலியில் (யாழ்ப்பாணம்) பிறந்து, ஆசிரியராகப் பணியாற்றிய நான், போர்ச்சூழல் காரணமாக குடும்பத்துடன் இடம்பெயர்ந்து ஆஸ்திரியாவை எனது புதிய வாழ்விடமாகக் கொண்டேன்.
இலக்கியப் பயணம்
Literary Path
ஆரம்பத்தில் சிறுகதைகள் மற்றும் புதுக்கவிதைகள் ஊடாக எனது எண்ணங்களைப் பதிவு செய்தேன். எழுத்து எனக்கு ஒரு வடிகாலாகவும், அடையாளமாகவும் அமைந்தது.
மரபை நோக்கிய நகர்வு
Return to the Tradition
மரபுக்கவிதை மீதான தாகத்தால், பாட்டரசர் கி. பாரதிதாசன் ஐயாவின் வழிகாட்டலில் யாப்பிலக்கணம் கற்றேன். இன்று பாரம்பரிய அகவல் பாக்களைப் படைத்து, தமிழ் மரபின் வேர்களை என் கவிதைகளில் நிலைநிறுத்துகிறேன்.
⁂
❦
எழுத்து எனக்கு
ஒரு வடிகாலாகவும்,
அடையாளமாகவும் அமைந்தது.
ஜெகதீஸ்வரி ரவீந்திரன்