கவிஞர் · Tamil Poet
ஜெகதீஸ்வரி ரவீந்திரன்
கவிஞர் - பாவலர்மணி வெற்றிச்செல்வி
ஈழத்தின் வேர்களைச் சுமந்து,
அகவல்களில் தமிழ் மரபை வாழ்விக்கிறேன்.
Born
அச்சுவேலி, யாழ்ப்பாணம்
Now
வியன்னா, ஆஸ்திரியா
Form
அகவல் · classical akaval verse
வியன்னா, ஆஸ்திரியா
MMXXIV
⁂
தேர்ந்த படைப்புகள்
Selected Works
- ௧ 2026 காதல் விழிமூடி மௌனமாக சிந்தனையில் இருக்கையில் விண்ணதிரச் சத்தமிட்டு வீணாகக் குழப்புகின்றாய்! எழில்கொண்ட உந்தனது…
- ௨ 2023 தமிழ் மொழி அன்னைத் தமிழை மனமேற்றி அமுதக் கவிகள் பாடிடுவோம்! என்றும் அதனை உயிராக ஏந்தி…
- ௩ 2023 பாவலர் எண்ணம் எல்லாம் தமிழெனவே என்றும் வாழும் தங்கையிவள்! கண்கள் இரண்டும் நூல்களையே காலம்…
- ௪ 2023 பெண்கள் உலகம் எங்கும் ஒளிர்ந்திடவே உயரம் எட்டும் பெண்களிவர்! நிலவாய் வெளிச்சம் அளித்திடுவார்! நித்தம்…
- ௫ 2023 அம்மா கனவில் கூடக் குழந்தையினைக் கண்ணின் மணியாய்க் காத்திடுவாள்! மனத்தில் இன்பம் பொங்கிடவே மார்பில்…
- ௬ 2023 மாமரம் வீட்டில் வளரும் மாமரமே வேண்டும் அளவு பயன்தருமே! பாட்டன் கையால் நட்டதுவாம் பாட்டி…
⁂
❦
ஒவ்வொரு சொல்லும்
என் வேர்களுக்கான
சமர்ப்பணம்.
ஜெகதீஸ்வரி ரவீந்திரன்
⁂
ஒரு வாழ்க்கை, வார்த்தைகளில்
A Life · In Words
அடித்தளம்
Foundation
இறையருளும் குருவருளும் துணையாக நிற்க, தமிழ்த்தாயை வணங்கி என் சிந்தனைகளை எழுத்தாக்குகிறேன். ஒவ்வொரு சொல்லும் என் வேர்களுக்கான சமர்ப்பணம்.
பூர்வீகமும் பயணமும்
Origin & Journey
ஈழத்தின் அச்சுவேலியில் (யாழ்ப்பாணம்) பிறந்து, ஆசிரியராகப் பணியாற்றிய நான், போர்ச்சூழல் காரணமாக குடும்பத்துடன் இடம்பெயர்ந்து ஆஸ்திரியாவை எனது புதிய வாழ்விடமாகக் கொண்டேன்.
இலக்கியப் பயணம்
Literary Path
ஆரம்பத்தில் சிறுகதைகள் மற்றும் புதுக்கவிதைகள் ஊடாக எனது எண்ணங்களைப் பதிவு செய்தேன். எழுத்து எனக்கு ஒரு வடிகாலாகவும், அடையாளமாகவும் அமைந்தது.
மரபை நோக்கிய நகர்வு
Return to the Tradition
மரபுக்கவிதை மீதான தாகத்தால், பாட்டரசர் கி. பாரதிதாசன் ஐயாவின் வழிகாட்டலில் யாப்பிலக்கணம் கற்றேன். இன்று பாரம்பரிய அகவல் பாக்களைப் படைத்து, தமிழ் மரபின் வேர்களை என் கவிதைகளில் நிலைநிறுத்துகிறேன்.
தொடர்பு
Get in Touch
ஒரு கேள்வி, ஒரு நன்றி, அல்லது ஒரு கவிதை —
எல்லாமே வரவேற்கிறேன்.