அடுக்கு மல்லிக் கன்றைநட்டு
அல்லும் பகலும் பாதுகாத்தேன்!
படுக்கும் போதும் நினைவிலது
பலவாய்க் கனவைத் தந்திடுமே!
அடுத்தே இலைகள் கண்டவுடன்
ஆகா மனத்தில் பேரின்பம்!!
எடுப்பாய் வளர்ந்த கொடிதழைத்து
இனிதாய் மலர்கள் மலர்ந்தனவே!
(275)
முதலாய்ப் பூவை அம்மனுக்கு
முன்பு சாத்திக் கும்பிட்டேன்!
இதழ்க ளடுக்கி மணமல்லி
இயல்பாய் நிறையப் பூத்ததுவே!
நிதமும் மாலை வீடெல்லாம்
நிறைந்த வாசம் வீசியதே!
அதனைக் கண்டே அயலவரும்
அகத்தில் ஆசை கொண்டாரே!
(276)
கண்ணும் கருத்தும் அதில்வைத்து
கன்றைக் காத்து வளர்த்தேனே!
தண்ணீர் தினமும் ஊற்றிவர
தழைத்தே அழகாய் வளர்ந்ததுவே!
மண்ணில் உள்ளோர் வியந்திடவே
மருந்துக் குணமும் பலவுண்டாம்!
என்னைக் கவர்ந்த வெள்ளைப்பூ
என்றும் தலையில் சூட்டிடுவேன்!
(277)
________________
க
உங்கள் கருத்து
Your Reflection