வாழ்வினில் கொடிய நாளாம்
வானெலாம் அதிர்ந்த நாளாம்
சூழ்ந்தநல் மனிதர் மானம்
சூழ்ச்சியால் களைந்த நாளாம்
காழ்ப்புணர் வுகொண்டே தீயோர்
கறையினைப் படிய வைத்து
தாழ்வுறாத் தமிழன் வீரம்
தரணியில் அறிந்த நாளாம்.
(13)
கலகமே விளைத்த மூடர்
களைத்தனர் வீரம் கண்டே
உலகமே ஒன்றாய்க் கூடி
உயர்பெரும் மொழியை வீழ்த்த
பலமெனச் சேர்ந்து வந்து
பகையினைத் தந்த நாளில்
உலகினில் தமிழர் எல்லாம்
உணர்வினால் சோகம் ஆனார்!
(14)
எண்ணிலா உயிர்கள் வீழ
எம்மினம் துடித்துக் கத்த
கண்ணெனக் காத்த ஈசன்
கருணையை மறந்து நின்றான்!
புண்பட நெஞ்சம் எல்லாம்
புத்துணர் விழந்து வீழ
மண்ணினை இழந்த மக்கள்
மனங்களின் துயரம் கேளாய்!
(15)
________________
க
உங்கள் கருத்து
Your Reflection