விழிமூடி மௌனமாக சிந்தனையில் இருக்கையில்
⁂
விண்ணதிரச் சத்தமிட்டு வீணாகக் குழப்புகின்றாய்!
⁂
எழில்கொண்ட உந்தனது எரியூட்டும் விழிகளவை
⁂
என்முன்னே தோன்றியதால் எந்நிலையும் குலைந்ததன்றோ!
⁂
கழித்திடவே நினைக்கையிலும் காதலதைப் பொழிகின்றாய்
⁂
கண்ணுக்குள் நடனமிட்டுக் களவிடுறாய் இதயமதை!
⁂
வழியெல்லாம் உன்நினைவால் வாடுகையில் சிரிக்கின்றாய்
⁂
வல்லவனாய் நானிருந்தும் வசமாக மாட்டிவிட்டேன்!
க
உங்கள் கருத்து
Your Reflection