எண்ணம் எல்லாம் தமிழெனவே
என்றும் வாழும் தங்கையிவள்!
கண்கள் இரண்டும் நூல்களையே
காலம் முழுதும் படித்தனவே!
பெண்ணாய்ச் செய்த சாதனையால்
பெருமை வாழ்வில் சேர்த்தாளே!
மண்ணில் பிறந்த தேவதையாய்
மரபைக் கற்றாள் வாழியவே!
⁂
கருத்தில் தமிழே பொங்கிவரக்
கவனம் கொண்டே கவிபடைத்தாள்!
விருத்தம் ஐந்நூ(று) அழகாக
விரைந்தே எழுதிப் புகழ்பெற்றாள்!
விரும்பி ஆசான் பட்டமதை
வெள்ளை மனமாய் அளித்தாரே!
விருதாய்ப் பட்டம் பெற்றிட்ட
வெற்றிச் சரளா வாழியவே!
⁂
________________
க
உங்கள் கருத்து
Your Reflection