இலங்கை ஆண்ட இராவணனாம்!!
ஈசன் வரத்தைப் பெற்றவனாம்!
பலரும் மகிழும் தமிழிசையைப்
பாடிப் பாடி மகிழ்ந்தவனாம்!
மலரும் வாழ்வில் சிவபக்தன்!
மண்ணே வணங்கும் பெருமறவன்!
உலகம் வியக்கும் பேராற்றல்
உண்மை உடையான் புகழ்வாழ்க!
(242)
பத்துத் தலைகள் கொண்டவனாய்ப்
பலமே வாய்ந்த பெருவீரன்!
எத்திக் கிலுமே இவன்போலே
இன்னோர் சிறந்த அரசனிலை!
வித்தை பலவும் கற்றவனாம்
வியக்கும் வண்ணம் ஆண்டவனாம்
சித்தம் யாவும் மண்மீது
சிறந்த மன்னன் புகழ்வாழ்க!
(243)
சீதை தன்னைக் கவர்ந்ததனால்
சிதைந்து போன தழகொல்லாம்!
போதாத் துன்பம் வந்ததுவே
போரும் மூண்டு கொன்றதுவே!
தீதாய்ப் போன செயலாலே
தீங்கைப் பெற்றான் இராவணனே!
வேதா என்று தமிழினமே
வேண்டும் தீரன் புகழ்வாழ்க!
(244)
________________
க
உங்கள் கருத்து
Your Reflection