பிறந்த பயனை அடைய
பேணிப் பாடு படுவோமே!
திறந்த மனமே கொண்டு
திறமை யாகக் கற்போமே!
உறங்கு நேரங் குறைத்தே
ஊக்கங் கொண்டே யுழைப்போமே!
சிறப்பாய்ச் சிகரந் தொடவே
சிந்தை முழுதும் நெறியேற்போம்!
⁂
தோல்வி கண்டே என்றும்
தோற்றோம் என்றே எண்ணாதே!
ஆல்போற் தழைப்போம் என்றே
அல்லும் பகலும் முயல்வோமே!
கால்கள் முன்னே வைக்க
காண்போம் வெற்றிப் படிகளையே!
இல்லா தோருக் கிரங்கி
ஏற்றம் காணச் செய்வோமே!
⁂
தினமும் செய்யுந் தொழிலாற்
திறமை கொள்வோம் நன்றாக!
மனத்தில் உறுதி கொண்டு
மகிழ்வாய் நம்பித் தொடர்வோமே!
கனமாம் மனத்தை மாற்றிக்
கனிவாய் நாளும் வாழ்வோமே!
தனமும் சேருந் தன்னாற்
தரணி போற்று மென்றென்றும்!
⁂
________________
க
உங்கள் கருத்து
Your Reflection