நண்பர் ஒன்றாய்க் கூடி
நல்ல பகலை வரவேற்க,
விண்ணில் முகிலின் கூட்டம்
விடிந்த பொழுதை இருளாக்க,
அண்டம் அதிரும் வண்ணம்
அங்கே சத்தம் கேட்டதுவே!
கண்ணைக் கூசும் மின்னல்
கதியில் தோன்றி ஓடியதே!
⁂
மண்ணில் மழையும் பொழிய
மகிழ்ந்து சிறுவர் சத்தமிட
இன்பம் கொண்ட உழவர்
ஈடில் மகிழ்வைக் கொண்டனரே!
பண்கள் பாடி யாடிப்
பட்டுச் சிறுவர் சேர்ந்திட்டார்!
எண்ணம் எல்லாம் ஒன்றாய்
எல்லோர் மனங்கள் குளிர்ந்தனவே!
⁂
வாடி இருந்த பயிர்கள்
வளமாய்ச் செழிக்கக் கண்டோமே!
ஓடி வடிந்த வெள்ளம்
உள்ளம் குளிர வைத்ததுவே!
நாடிச் சென்றே ஆற்றை
நன்றாய் நிரம்பச் செய்ததுவே!
கோடி நன்மை நல்கும்
கோல மழையைப் போற்றுகிறேன்!
⁂
________________
க
உங்கள் கருத்து
Your Reflection