எங்கள் உள்ளத் திருக்கும்
இறையை உணர முயலாமல்
அங்கும் இங்கும் தேடி
அலைந்து துன்பம் அடைகின்றோம்!
தங்கப் பூச்சாம் சிலையைத்
தவித்து வணங்கிச் செல்கின்றோம்!
அங்கத் துள்ளே உறைந்த
அமைதி அறிய மறுக்கின்றோம்!
அன்பு பாசம் பெருக
அகத்தில் திருப்தி கிடைத்திடுமே!
ஒன்றி மனத்தை யடக்க
ஓடும் வந்த துன்பங்கள்!
வன்மம் நீங்கி வாழ்ந்தால்
வசந்தம் வாழ்வில் வீசிடுமே!
மண்ணில் வாழும் வரையும்
மனத்தைத் தூய்மை கொள்வோமே!
சிந்தை சிறக்கும் நினைவு
சீராய் எம்மை வழிநடத்தும்!
உந்தும் சக்தி கொண்டே
உதவாச் செயலை விரட்டிடுவோம்!
இந்தப் பிறவி போதும்
இயல்பாய் இனிதே வாழ்ந்திடுவோம்!
சிந்தும் கண்ணீர் மறையச்
சிறந்த வழியைக் கடைப்பிடிப்போம்!
________________