நிறைமதி யொளியினை என்றும் தருக!
நினைவினில் நன்னெறி எண்ணம் வளர்க!
கறையிலா வழிதனில் பயணம் புரிக!
கதியென வணங்கிட அருளே பொழிக!
இறைவியே உயர்வினை நாளும் இடுக!
இசையுடன் இன்றமிழ் இன்பம் விளைக!
முறையுடன் திகழ்ந்திடும் மேன்மை மொழிக!
மொழியுடன் தமிழ்நிலம் சிறந்தே யெழுக!
(465)
க
உங்கள் கருத்து
Your Reflection