அகத்துள்ளே ஒளியேற்றும்! அறியாமை நீங்கும்
அனர்த்தங்கள் விலகிடவே யாசைகளும் தொலையும்!
சுகமாகப் பேரின்பப் பெருவெள்ளம் பாயும்
சுற்றியுள்ள பிரச்சனைகள் தூசாகத் தோன்றும்!
சுகந்தமான தெய்வமண முள்ளத்தில் வீசும்
சுழல்கின்ற உலகினிலே இறையருளும் நிறையும்!
மகத்தான அமைதியது நிரந்தரமே யாகும்
மந்திரமாய் வாழ்வதிலே மாற்றங்கள் நிகழும்!
(500)
இறைவனையே தேடியெங்கும் அலைந்திடவும் வேண்டாம்
இன்னலிலே சிக்கிமனம் மாய்ந்திடவும் வேண்டாம்!
நிறைவாக எம்முள்ளே தெய்வீகம் பரவும்
நிலையான வாழ்வுதனை உள்மனமும் சொல்லும்!
கறையில்லா நற்கொள்கை எம்மோடு சேரும்!
கதிரவனின் ஒளியாக உயிராற்றல் ஓங்கும்!
மறைகளையும் கற்றுணர்ந்த மகான்போன்று மாற்றம்!
மகத்தான செய்தியொன்றைப் பாடமெனக் கற்போம்
(501)
________________
க
உங்கள் கருத்து
Your Reflection