முன்பின் குடியை நன்காய்ந்து
மூத்தோர் பார்த்த திருமணமாம்!
அன்பின் ஊற்றாய் அவர்வாழ
ஆர்வம் கொண்டார் பெற்றோரே!
இன்ப முடனே நாள்குறித்தே
ஏற்ற பணிகள் செய்வாரே!
அண்டை அயலார் வந்திடுவர்
அங்கே உறவோர் நிறைந்திடுவர்!
⁂
கண்ணுக் கழகாய் அலங்காரம்
காணு மிடத்தில் தோரணங்கள்
வண்ணம் மிகுந்த மண்டபத்தில்
வாடா மலராய்ப் பூவையர்கள்
பெண்ணைப் பற்றிக் கனவுடனே
பித்தாய் அமர்ந்த மணமகனும்
பண்பின் இருப்பாய் மணமகளும்
பாரோர் வாழ்த்த இணைவாரே!
⁂
________________
க
உங்கள் கருத்து
Your Reflection