உலகம் எங்கும் ஒளிர்ந்திடவே
உயரம் எட்டும் பெண்களிவர்!
நிலவாய் வெளிச்சம் அளித்திடுவார்!
நித்தம் கடமை ஆற்றிடுவார்!
கலகம் இன்றிக் குடும்பத்தைக்
கண்ணாய்ப் போற்றிப் வளர்த்திடுவார்!
மலரும் மழலைச் செல்வத்தை
மாண்பா யாக்கி மகிழ்ந்திடுவார்!
பொறுமை காத்து வாழ்ந்திடுவர்
பொல்லாத் துன்பம் தாங்கிடுவார்!
வறுமை வாழ்வைத் தான்போக்கி
வசந்தம் வீச வைத்திடுவார்!
சிறுமை நிலையை அடையாது
சிறப்பாய்க் குடும்பம் காத்திடுவார்!
அருமைப் பெண்கள் எந்நாளும்
அழகாய் வீட்டை நடத்திடுவார்!
அழகின் வடிவம் கொண்டவராய்
அமைதி யளிக்கும் இறைவுருவம்!!
உழன்று நோகும் உறவுக்கே
உதவிக் கரத்தை நீட்டிடுவார்!
பழமை காத்துப் பண்புடனே
பல்லோர் வாழ்த்தப் பணிசெய்வார்!!
பழமாய்ப் பாச மனமுடையார்
பாரே போற்ற வாழியவே!!
________________