நெஞ்சம் குளிர்ந்திட நெகிழ்ச்சி கொண்டே
மஞ்சம் மகிழ்ந்திட மனைவியும் வந்தாள்!
உள்ளம் முழுவதும் உவகையைத் தந்து
கள்ளம் இன்றிக் கட்டியும் அணைத்தாள்!
அன்பினைத் தாயாய் அள்ளி வழங்கி
அன்னையின் பாச அமுதை அளித்தாள்!
தேன்சுவை பாய்ந்திடத் தென்றலாய் வந்து
மாண்புடன் உயர்வாய் மனத்தினில் பதிந்தாள்!
அம்மன் அருளால் அழகென வில்லறம்
அமைய வரமாய் அனைத்தும் கிடைத்ததே!