நாட்டின் உரிமை காக்கப் பாடுபட்டோர்
நாதி அற்றோர் ஆகித் தவிக்கின்றார்!
காட்டில் வாழக் கூட இடமற்றே
கடந்து எல்லை தாண்டிச் சென்றார்கள்!
வாட்டி எடுக்கும் துன்பம் கணக்கற்றே
வகையும் தெரியா திறந்தோர் பலரன்றோ!
ஏட்டில் எழுதித் தணலைக் குறைத்தாலும்
ஏங்கித் தவித்தே யுறவைத் தேடுகின்றோம்!
க
உங்கள் கருத்து
Your Reflection