எண்ணற்ற எண்ணங்கள் மனத்தில் தோன்ற
எடுத்துவைத்தேன் அடிகளையும் மெதுவாய் முன்னே!
கண்ணினிலே பட்டதெல்லாம் விந்தை யாகக்
கருத்துடனே பதித்திட்டேன் உள்ளத் துள்ளே!
மண்ணினிலே பசுமையெனச் செடிகள் எல்லாம்
மந்திரமாய் என்னுடனே கதைகள் பேச!
வண்ணமெனப் பூத்திட்ட மலர்கள் கண்டேன்!
வகைவகையாய்க் கற்பனையில் மிதந்து வந்தேன்!
(486)
என்னுடலைத் தழுவியது தென்றல் காற்றே
என்மனத்தில் ஏதேதோ உணர்ச்சி வெள்ளம்!
பன்மடங்கு மகிழ்சியிலே குளிர்ந்து நானும்
பரவசமாய்ப் பறப்பதுபோல் நினைவில் கொண்டேன்!
தன்னிறைவு பெற்றிட்ட திருப்தி பெற்றே
தகுந்தநல்ல வரிகளினால் கவிதை செய்தேன்!
பாடல்கள் கன்னலெனத் தமிழில் தந்தேன்
கனியமுதம் போலவொரு சுவையை யுண்டேன்!
(487)
________________
க
உங்கள் கருத்து
Your Reflection