உறவு சேர்ந்து வாழ்ந்தாலே
உயர்வு நிறையும் தன்னாலே!
அறனென் வழியைக் கொண்டிங்கே
அன்பும் பண்பும் ஓங்கிடுமே!
மறந்து நோய்கள் வந்திடுமோ?
மகிழ்ச்சிக் கென்றும் தடைவருமோ?
சிறப்பாய் வாழ வழிவகுக்கும்
சிந்தை எல்லாம் நல்வழியே!
(216)
சுற்றம் சூழ்ந்து வாழ்ந்திட்டால்
தூய வாசம் வீசிடுமே!
பற்றுக் கொண்டே ஒற்றுமையாய்ப்
பாசம் கொண்டு பழகிடுவோம்!
பெற்றோர் நல்ல வழிகாட்டப்
பெற்றோம் இங்கே நற்பெயரை!
உற்றார் சேர்ந்து கைபிடித்தே
உயர்வில் துணையாய் நின்றனரே!
(217)
போரே வந்து தாய்நாட்டில்
புகுந்து துன்பம் தந்ததுவே!
சேரும் இடமே தெரியாது
சிதறிப் பிரிந்தோம் பலகண்டம்
வாராய் என்று வரவேற்ற
வசதி படைத்த நாட்டினிலும்
யாரும் அற்ற ஏதிலியாய்
எங்கள் வாழ்வு செல்கிறதே!
(218)
________________
க
உங்கள் கருத்து
Your Reflection